Saturday, August 9, 2008

எக்ஸ் பி பாஸ்வேர்டை மறந்துவிட்டால்?



இன்டர்நெட்டில் உலா வருகையில் குறிப்பிட்ட தளம் ஒன்றுக்கான பாஸ் வேர்டினை மறந்துவிட்டீர்கள். இதனை அந்த தளத்திடம் தெரிவித்தால் உடனே அந்த தளம் நீங்கள் குறிப்பிட்ட கேள்விக்கு அளித்த பதிலைத் தந்து பின் அதற்கான விடை யையும் குறிப்பிட்டு அதிலிருந்து மறந்து போன பாஸ்வேர்டை நினைவிற்குக் கொண்டு வர உதவுகிறது

ஆனால் எக்ஸ்பியில் கொடுத்த பாஸ்வேர்டை மறந்துவிட்டால் இது போன்ற கேள்வி பதில் எல்லாம் இருக்காது. அப்படியானால் மறந்துவிட்டால் அவ்வளவுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விண்டோஸ் எக்ஸ்பியில் கொடுத்த பாஸ்வேர்டை மீண்டும் ரீசெட் செய்திடும் வழிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

1. எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பாஸ்வேர்டை மறந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டரை நிறுத்தி மீண்டும் Safe Mode ல் ரீ பூட் செய்திடுங்கள். இதற்கு ரீபூட் செய்தவுடன் எப்8 கீயை விட்டு விட்டு தட்டுங்கள். சிறிது நேரத்தில் ஒரு மெனு கிடைக்கும். அதில் SafeMode ல் கம்ப்யூட்டரை பூட் செய்திட ஓர் ஆப்ஷன் கிடைக்கும். Safe Mode ஐத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டி கம்ப்யூட்டர் பூட் ஆவதைப் பாருங்கள்.

2. லாக் இன் ஸ்கிரீன் கிடைக்கும். இதில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்டில் நுழையவும்.

3. டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் SafeMode ல் இயங்குவது உறுதி செய்யப்படும்.
இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் ஜஸ்ட் yes என்பதைத் தட்டவும். உங்கள் கம்ப்யூட்டர் திரையின் ரெசல்யூசன் சிறிது தெளிவற்ற தன்மையில் இருக்கும். கவலைப் பட வேண்டாம்.

4. அடுத்து File, Control Panel திறக்கவும். பின் அதில் User Accounts என்பதில் கிளிக் செய்து திறக்கவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து அக்கவுண்ட்களும் காட்டப்படும்.

5. இப்போது எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் நீக்கப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Remove the Password என்று உள்ள லிங்க்கை நீக்கவும்.

6. இறுதியாக நீங்கள் புதிய பாஸ்வேர்ட் அமைக்கப்போவதாக இருந்தால் Create a Password என்ற லிங்க்கைத் தேர்ந் தெடுக்கவும். இங்கு பாஸ்வேர்ட் அமைப் பதாக இருந்தால் அமைத்துவிட்டு பின் அதனை பத்திரமாக நினைவில் வைத்துக் கொள்ளும் இடத்தில் எழுதி வைக்கவும்.

கூகுள் மெயில் ஷார்ட் கட்



மெயில் ஷார்ட் கட்கீஸ்உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை மவுஸ் கொண்டு செலுத்துவற்குப் பதிலாகக் கீ போர்டு ஷார்ட் கட் கீகள் மூலம் செயல்படுத்தலாம். இந்த கீ போர்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்து வதனால் நம் நேரம் மிச்சமாகிறது. மேலும் கீ போர்டிலிருந்து கைகளை எடுக்காமல் விரைவாக நம்மால் செயல் பட முடியும்.

இதோ சில ஷார்ட் கட் கீகள்:

ஜஸ்ட் எப் கீயை மட்டும் அழுத்தினால் இமெயில் செய்தியை அடுத்ததற்கு பார்வேர்ட் செய்திட முடியும்.
Shift+I: இமெயில் மெசேஜைப் படித்ததாக குறியீடு செய்வதற்கு
Shift+u: இமெயில் மெசேஜைப் படிக்காததாகக் குறியிட
r: மெயிலை அனுப்பியவருக்கு பதில் அனுப்ப
a: அனைத்து மெயில் பெற்றவருக்கும் பதில் அனுப்ப
Ctrl+c: அப்போதைய இமெயிலை ட்ராப்டாக சேவ் செய்திட
Z: முந்தைய செயல்பாட்டை கேன்சல் செய்திட
?: கீ போர்டு ஷார்ட்கட் கீகள் குறித்த உதவிக் குறிப்புகளைக் காட்ட
c: புதிய இமெயில் மெசேஜ் ஒன்றை எழுதிட
/: சர்ச் பாக்ஸில் உங்கள் கர்சரை நகர்த்த
u: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை ரெப்ரெஷ் செய்து லேட்டஸ்ட்டாக வந்த இமெயில் மெசேஜைக் காண
!: இமெயில் மெசேஜ் ஒன்றை ஸ்பாம் மெயிலாகக் குறியிட
p: தற்போதைய மெயிலுக்கு முன் உள்ள மெயிலுக்குச் செல்ல
.: வெறும் புள்ளி அடித்தால் கூடுதலான ஆப்ஷன்ஸ் காட்டப்படும்
Esc: கர்சரை தற்போதைய பீல்டிலிருந்து நகர்த்தும்.

கம்ப்யூட்டரை ஸ்பை வேர் இல்லாமல் வைத்திருக்க


புதியதாக கம்ப்யூட்டர் ஒன்றினை உங்கள் அலுவலகப் பயன்பாட்டிற்கு வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் திட்டத்துடன் வாங்கி இருக்கிறீர்களா? அல்லது உங்கள் மகன் அல்லது மகள் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் பட்டப்படிப்பிற்கு பயன்படுத்த வாங்கி தந்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன் ஸ்பை வேர் எதுவும் வந்திடுமோ என்று பயப்படுகிறீர்களா?

ஆம், பாதுகாப்பு எதுவுமில்லாத கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் இணைந்த சில நிமிடங்களில் நிச்சயமாய் ஏதேனும் ஸ்பைவேர் புரோகிராமால் பாதிக்கப்படும் அபாயம் நிச்சயமாய் உள்ளது. அதனால் இயக்கத் தொடங்கியவுடன் என்ன செய்யலாம் என்பதனை இங்கு படிப்படியாய்க் காணலாம்.

1.விண்டோஸ் இயக்கத் தொகுப்பினை உடனே அப்டேட் செய்திடுங்கள். கண்ட்ரோல் பேனல் சென்று Windows Security Center செல்லவும்.
அங்கு automatic download என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
கம்ப்யூட் டருடன் ஏதாவது பயர்வால் புரோகிராம் அளிக்க ப்பட்டு அது இயங்கிக் கொண்டிருந்தால் விட்டு விடலாம். இல்லை என்றால் Windows XP firewall இயக்கவும்.

2. இயக்கத் தொகுப்புடன் ஆன்டி வைரஸ் தொகுப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை அப்டேட் செய்திடவும். ஆட்டோமேடிக் அப்டேட் என்பதில் டிக் அமைத்து வைக்கவும்.

3.விண்டோஸ் எக்ஸ்புளோரர் இயக்கத் தொகுப்புடன் கிடைத்திருக்கும். எனவே ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பிரவுசர்களில் ஒன்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.

4.வேறு பிரவுசர் தொகுப்பினைப் பயன் படுத்தினாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரரை லாக் செய்து வைக்கவும்.

5. குறைந்தது இரண்டு ஆண்டி ஸ்பை வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்து வைக்கவும். என்னைப் பொறுத்தவரை AdAware மற்றும் Microsoft AntiSpyware என்ற இரண்டினையும் பரிந்துரைப்பேன்.

6.ஜாவாகூல் சாப்ட்வேர் தளத்திலிருந்து Spyware Blaster and SpywareGuard என்ற இரண்டு புரோகிராம்களை அவசியம் இறக்கிப் பதிந்து வைக்கவும்.

7.IESPYAD என்னும் பாதுகாப்பு தொகுப்பினைப் பதிந்து வைக்கவும். இதனைப் பதிந்தால் வெகு மோசமான 20 ஆயிரம் தொகுப்புகளை மைக்ரோசாப்ட் நீக்கிடும். பாதுகாப்பான இன்டர்நெட் உலா வருவதற்கு மேலே காட்டியுள்ள புரோகிராம்களை இயக்கிப் பார்க்கவும்.

விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்



விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்

ALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர
ALT+2: ஸூம் 100 சதவிகிதமாக்க
ALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க
ALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரையில் காண
ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல
ALT+T: டூல்ஸ் மெனு செல்ல
ALT+P: பிளே மெனு செல்ல
ALT+F4: மீடியா பிளேயரை மூடிவிட
CTRL+1:மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர
CTRL+2: மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர
CTRL+B: இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட
CTRL+F: வரிசையில் அடுத்த பைலை இயக்க
CTRL+E: சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள
CTRL+P: இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க
CTRL+T: இயங்கியதை மீண்டும் இயக்க
CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட
CTRL+SHIFT+F: ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட
CTRL+SHIFT+S: வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/வீடியோ இயக்க
F8: மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த
F9: மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட
F10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க
Enter / Space bar: ஒரு பைலை இயக்க

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தொகுப்பின் சில பங்சன்கள்
எக்ஸெல் தொகுப்பில் அதன் அமைப் பிலேயே பலபங்சன்கள் அமைக்கப்பட்டு நமக்கு கணக் கிட எளிமைப் படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் சில பங்சன்கள் அனைவரும் எளிதாகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பங்சன் களாகும். அவற்றை இங்கு காணலாம்.

அவை : SUM, AVERAGE, MAX, MIN, மற்றும் PRODUCT பங்சன்கள் ஆகும். இவற்றின் செயல்பாடுகளையும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கும் வழிகளையும் இங்கு காணலாம்.

SUM: இந்த செயல்பாட்டின் மூலம் எண்களைக் கூட்டலாம். இதற்கான பார்முலாவினை அமைக்கும்போது அவை எண்களாகவோ அல்லது செல்களைக் குறிக்கும் குறியீடு களாகவோ இருக்கலாம். இதற்கான பார்முலா அமைப்பு SUM (numberl,number2, .,.) என இருக்க வேண்டும். இதில் numberl,number2 என்பவை நாம் அமைக்க இருக்கும் எண்கள் அல்லது செல் குறியீடுகள் ஆகும். எடுத்துக் காட்டாக SUM (3, 2) என்பது 5 என்ற விடையைக் கொடுக்கும். இதே போல செல்களில் உள்ள மதிப்புகளைக் கூட்டிக் காண அந்த செல்களின் எண்களைத் தரலாம். எடுத்துக் காட்டாக செல் A டூ முதல் A 30 வரை உள்ள மதிப்புகளைக் கூட்டிப் பெற =SUM (A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.

AVERAGE; இந்த பங்சன் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் சராசரியினைத் தருகிறது. மேலே குறிப்பிட்டது போல இவை எண்களாகவோ அல்லது செல் குறியீடு மூலம் தரப்படும் மதிப்புகளாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (numberI, number2, ...) என்பதில் அடைப்புக் குறிக்குள் தரப்படும் எண்களின் சராசரி மதிப்பினை பார்முலா மூலம் விடையாகப் பெறலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (3, 2) என்பது 2.5 என்ற விடையைத் தரும். A 1 முதல் A30 வரை உள்ள மதிப்புகளின் சராசரியைப் பெற =AVERAGE(A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.

MAX: இந்த பங்சன் கொடுக்கப்பட்ட எண்களின் அல்லது மதிப்புகளின் அதிக பட்ச மதிப்புடைய எண்ணைத் தருகிறது. எடுத்துக் காட்டாக = MAX(3. 2,45,23) என அமைக்கப் படுகையில் 45 என்ற விடை கிடைக்கும்.

இதே போல குறைந்த மதிப்பினை அறிய MIN பங்சன் பயன்படுகிறது. =M1N(3, 2,45,23) என்று பார்முலா அமைத்தால் 2 விடையாகக் கிடைக்கும்.

PRODUCT: இந்த பங்சன் மூலம் எண்களை அல்லது மதிப்புகளை பெருக்கிப் பெறலாம். =PRODUCT (13, 2) என்ற பார்முலா 26 என்ற மதிப்பினைக் கொடுக்கும். இந்த பார்முலாவிலும் எண்களுக்குப் பதிலாக செல் குறியீடுகளைத் தரலாம். A1 செல் முதல் A30 வரையிலான செல்களில் உள்ள மதிப்புகளைப் பெருக்கிப் பெற =PRODUCT (A1:A30) என்ற வகையில் பார்முலா அமைத்துப் பெறலாம்.

இன்டெல் நடந்து வந்த 40 ஆண்டுகள்



கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.

1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.

1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.

1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.

1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.

1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.

1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.

1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.

1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.

1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.

2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.

2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.

2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.

2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.

2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.

2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.

2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.

2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.

விண்டோஸ் பைல் வகைகள்



நாம் விண்டோஸ் இயக்கத் தொகுப்பினைப் பயன்படுத்துகையில் ஒரு பைலைத் திறந்து இயக்க அது என்ன வகை பைல், அதனைத் திறக்க எந்த புரோகிராமினைத் திறக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப்படாமல் பைல் பெயர் மீது அல்லது அதன் ஐகான் மீது இருமுறை கிளிக் செய்கிறோம்.

டெக்ஸ்ட் டாகுமெண்ட்கள்:
கீழே டெக்ஸ்ட் பைலுக்கான பல வகை பைல் வகைகள் தரப்படுகின்றன.

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.

.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.

.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.

.ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

.htm / .html : ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.

.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.


சுருக்கப்பட்ட பைல்கள்:
கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.

.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.


பட பைல்கள்:
விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களை உருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப் பெயர்கள் தரப்படுகின்றன.

.psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும் உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம் அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழி செய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன் பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின் அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும் புரோகிராம் www.herculesoft.com என்னும் முகவரியில் கிடைக்கிறது.

.psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொரு இமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவான பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலை அதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.

.bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும் அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம் மூலமும் இதனைத் திறக்கலாம்.

.jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடு இன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ் பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதி நவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ் புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.

.gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.

.tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில் திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் எளிமையானதாகும்.

.scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர் பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்று டிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத் தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர் பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.


ஆடியோ பைல்கள்:
இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும்.

.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.

aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.

.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.

.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.


ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்:
சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக் செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்த பைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.

.exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம் இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்து இயங்கும்.

.bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள் தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம் மற்றும் எடிட் செய்திடலாம்.

.vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம் புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களை வடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களை எழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ் புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன் உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனை ஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.