எக்ஸெல் தொகுப்பின் சில பங்சன்கள்
எக்ஸெல் தொகுப்பில் அதன் அமைப் பிலேயே பலபங்சன்கள் அமைக்கப்பட்டு நமக்கு கணக் கிட எளிமைப் படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் சில பங்சன்கள் அனைவரும் எளிதாகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பங்சன் களாகும். அவற்றை இங்கு காணலாம்.
அவை : SUM, AVERAGE, MAX, MIN, மற்றும் PRODUCT பங்சன்கள் ஆகும். இவற்றின் செயல்பாடுகளையும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கும் வழிகளையும் இங்கு காணலாம்.
SUM: இந்த செயல்பாட்டின் மூலம் எண்களைக் கூட்டலாம். இதற்கான பார்முலாவினை அமைக்கும்போது அவை எண்களாகவோ அல்லது செல்களைக் குறிக்கும் குறியீடு களாகவோ இருக்கலாம். இதற்கான பார்முலா அமைப்பு SUM (numberl,number2, .,.) என இருக்க வேண்டும். இதில் numberl,number2 என்பவை நாம் அமைக்க இருக்கும் எண்கள் அல்லது செல் குறியீடுகள் ஆகும். எடுத்துக் காட்டாக SUM (3, 2) என்பது 5 என்ற விடையைக் கொடுக்கும். இதே போல செல்களில் உள்ள மதிப்புகளைக் கூட்டிக் காண அந்த செல்களின் எண்களைத் தரலாம். எடுத்துக் காட்டாக செல் A டூ முதல் A 30 வரை உள்ள மதிப்புகளைக் கூட்டிப் பெற =SUM (A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.
AVERAGE; இந்த பங்சன் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் சராசரியினைத் தருகிறது. மேலே குறிப்பிட்டது போல இவை எண்களாகவோ அல்லது செல் குறியீடு மூலம் தரப்படும் மதிப்புகளாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (numberI, number2, ...) என்பதில் அடைப்புக் குறிக்குள் தரப்படும் எண்களின் சராசரி மதிப்பினை பார்முலா மூலம் விடையாகப் பெறலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (3, 2) என்பது 2.5 என்ற விடையைத் தரும். A 1 முதல் A30 வரை உள்ள மதிப்புகளின் சராசரியைப் பெற =AVERAGE(A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.
MAX: இந்த பங்சன் கொடுக்கப்பட்ட எண்களின் அல்லது மதிப்புகளின் அதிக பட்ச மதிப்புடைய எண்ணைத் தருகிறது. எடுத்துக் காட்டாக = MAX(3. 2,45,23) என அமைக்கப் படுகையில் 45 என்ற விடை கிடைக்கும்.
இதே போல குறைந்த மதிப்பினை அறிய MIN பங்சன் பயன்படுகிறது. =M1N(3, 2,45,23) என்று பார்முலா அமைத்தால் 2 விடையாகக் கிடைக்கும்.
PRODUCT: இந்த பங்சன் மூலம் எண்களை அல்லது மதிப்புகளை பெருக்கிப் பெறலாம். =PRODUCT (13, 2) என்ற பார்முலா 26 என்ற மதிப்பினைக் கொடுக்கும். இந்த பார்முலாவிலும் எண்களுக்குப் பதிலாக செல் குறியீடுகளைத் தரலாம். A1 செல் முதல் A30 வரையிலான செல்களில் உள்ள மதிப்புகளைப் பெருக்கிப் பெற =PRODUCT (A1:A30) என்ற வகையில் பார்முலா அமைத்துப் பெறலாம்.
Saturday, August 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment