Thursday, May 1, 2008

மனதிற்கு அமைதி வேண்டுமா ?


இந்திய கர்நாடக சங்கீத ரசிகரா நீங்கள்! உங்களுக்காகவே ஓர் இணையதளம் www.sangeethapriya.org www.sangeethamshare.org/tvg/ என்ற முகவரிகளில் இயங்கி வருகின்றன. இந்த தளங்களில் நீங்கள் விரும்பும் பாடகரின் பாடல்கள் பொதிந்து கிடக்கின்றன.

உங்களிடம் யாருடைய பாடலாவது உள்ளதா? அதனை அனைவரும் ரசிக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? இந்த தளத்திலேயே அவற்றைப் பதிந்து வைக்கலாம். என்னிடம் எதுவும் இல்லையே? ஆனால் இந்த தளம் அமைப்பதில் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்கள் பங்களிப்பை பணமாக அனுப்பலாம்.

முற்றிலும் இந்திய கிளாசிகல் இசைக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட இந்த தளத்தில் வர்த்தக ரீதியாக விற்பனை செய்யப்படும் சிடியிலிருந்து பாடல்களைப் பதியக் கூடாது.

ரேடியோ கச்சேரிகள், இசைக் கலைஞர்கள் மக்களுக்காகத் தந்த இசை விழாக்கள், ரசிகர்களுக்கு அளித்த விளக்கங்கள் எனப் பலவகைகளில் இங்கு கர்நாடக சங்கீதத்தினை ரசிக்கலாம். ஸ்ரீமதி எம்.எஸ். அம்மா, செம்பை, ஜி.என்.பி., எம்பார், டி.கே.பி., கே.வி.என்.,அரியக்குடி – இப்படி யார் வேண்டும் உங்களுக்கு. இவர்களின் கச்சேரிகள் பதியப்பட்டு இங்கு எம்பி3 பைல் பார்மட்டில் மாற்றப்பட்டு டவுண்லோட் செய்திடக் கிடைக் கின்றன. சில ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த கலைஞர் களுக்கான தனிப் பிரிவுகளை இந்த தளத்தில் உருவாக்கி பராமரித்து வருகின்றனர். இவ்வாறு 800 அப்லோட்கள் உள்ளன. இவை ஒவ்வொன் றிலும் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் உள்ளன.

பாலமுரளி கிருஷ்ணா, வீணை பாலச் சந்தர், மதுரை மணி அய்யர், செம்மங்குடி, சுதா ரகுநாதன், நித்ய ஸ்ரீ மகாதேவன், காயத்ரி, மஹாராஜபுரம், வலையபட்டி, எம்.பி.என். திருவிழா, என யாரையாவது ஒரு கலைஞரின் பெயரைச் சொல்லுங்கள் அவரின் பாடல் குறைந்த பட்சம் மூன்றாவது இருக்கும். எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. வளரும் கலைஞர்களின் பாடல்களும் பல உள்ளன. ஆல் இந்தியா ரேடியோ வழங்கிய கச்சேரிகள் பல அவற்றின் குறிப்புகளுடன், இசை, தாளம் ஆகியவற்றுடன், தரப்பட்டுள்ளன.

எனக்கு திருவையாறு இசைத் திருவிழாவில் நடந்த கச்சேரி வேண்டும் என விரும்புகிறீர்களா? ஆண்டு வாரியாக கச்சேரி சீசன் தரப்பட்டுள்ளது. சென்னை திருவையாறு வேண்டுமா? அதுவும் கிடைக்கிறது. சில வீடியோ காட்சிகளும் கிடைக்கின்றன. எம்.எஸ். அம்மா பாடுவதை அப்படியே தெளிவாக கண்டு கேட்கலாம். மனதிற்கு அமைதி வேண்டுமா? செல்லுங்கள் இந்த சங்கீதக் கடலுக்கு.

No comments: