Saturday, August 9, 2008

எக்ஸ் பி பாஸ்வேர்டை மறந்துவிட்டால்?



இன்டர்நெட்டில் உலா வருகையில் குறிப்பிட்ட தளம் ஒன்றுக்கான பாஸ் வேர்டினை மறந்துவிட்டீர்கள். இதனை அந்த தளத்திடம் தெரிவித்தால் உடனே அந்த தளம் நீங்கள் குறிப்பிட்ட கேள்விக்கு அளித்த பதிலைத் தந்து பின் அதற்கான விடை யையும் குறிப்பிட்டு அதிலிருந்து மறந்து போன பாஸ்வேர்டை நினைவிற்குக் கொண்டு வர உதவுகிறது

ஆனால் எக்ஸ்பியில் கொடுத்த பாஸ்வேர்டை மறந்துவிட்டால் இது போன்ற கேள்வி பதில் எல்லாம் இருக்காது. அப்படியானால் மறந்துவிட்டால் அவ்வளவுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விண்டோஸ் எக்ஸ்பியில் கொடுத்த பாஸ்வேர்டை மீண்டும் ரீசெட் செய்திடும் வழிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

1. எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பாஸ்வேர்டை மறந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டரை நிறுத்தி மீண்டும் Safe Mode ல் ரீ பூட் செய்திடுங்கள். இதற்கு ரீபூட் செய்தவுடன் எப்8 கீயை விட்டு விட்டு தட்டுங்கள். சிறிது நேரத்தில் ஒரு மெனு கிடைக்கும். அதில் SafeMode ல் கம்ப்யூட்டரை பூட் செய்திட ஓர் ஆப்ஷன் கிடைக்கும். Safe Mode ஐத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டி கம்ப்யூட்டர் பூட் ஆவதைப் பாருங்கள்.

2. லாக் இன் ஸ்கிரீன் கிடைக்கும். இதில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்டில் நுழையவும்.

3. டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் SafeMode ல் இயங்குவது உறுதி செய்யப்படும்.
இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் ஜஸ்ட் yes என்பதைத் தட்டவும். உங்கள் கம்ப்யூட்டர் திரையின் ரெசல்யூசன் சிறிது தெளிவற்ற தன்மையில் இருக்கும். கவலைப் பட வேண்டாம்.

4. அடுத்து File, Control Panel திறக்கவும். பின் அதில் User Accounts என்பதில் கிளிக் செய்து திறக்கவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து அக்கவுண்ட்களும் காட்டப்படும்.

5. இப்போது எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் நீக்கப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Remove the Password என்று உள்ள லிங்க்கை நீக்கவும்.

6. இறுதியாக நீங்கள் புதிய பாஸ்வேர்ட் அமைக்கப்போவதாக இருந்தால் Create a Password என்ற லிங்க்கைத் தேர்ந் தெடுக்கவும். இங்கு பாஸ்வேர்ட் அமைப் பதாக இருந்தால் அமைத்துவிட்டு பின் அதனை பத்திரமாக நினைவில் வைத்துக் கொள்ளும் இடத்தில் எழுதி வைக்கவும்.

கூகுள் மெயில் ஷார்ட் கட்



மெயில் ஷார்ட் கட்கீஸ்உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை மவுஸ் கொண்டு செலுத்துவற்குப் பதிலாகக் கீ போர்டு ஷார்ட் கட் கீகள் மூலம் செயல்படுத்தலாம். இந்த கீ போர்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்து வதனால் நம் நேரம் மிச்சமாகிறது. மேலும் கீ போர்டிலிருந்து கைகளை எடுக்காமல் விரைவாக நம்மால் செயல் பட முடியும்.

இதோ சில ஷார்ட் கட் கீகள்:

ஜஸ்ட் எப் கீயை மட்டும் அழுத்தினால் இமெயில் செய்தியை அடுத்ததற்கு பார்வேர்ட் செய்திட முடியும்.
Shift+I: இமெயில் மெசேஜைப் படித்ததாக குறியீடு செய்வதற்கு
Shift+u: இமெயில் மெசேஜைப் படிக்காததாகக் குறியிட
r: மெயிலை அனுப்பியவருக்கு பதில் அனுப்ப
a: அனைத்து மெயில் பெற்றவருக்கும் பதில் அனுப்ப
Ctrl+c: அப்போதைய இமெயிலை ட்ராப்டாக சேவ் செய்திட
Z: முந்தைய செயல்பாட்டை கேன்சல் செய்திட
?: கீ போர்டு ஷார்ட்கட் கீகள் குறித்த உதவிக் குறிப்புகளைக் காட்ட
c: புதிய இமெயில் மெசேஜ் ஒன்றை எழுதிட
/: சர்ச் பாக்ஸில் உங்கள் கர்சரை நகர்த்த
u: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை ரெப்ரெஷ் செய்து லேட்டஸ்ட்டாக வந்த இமெயில் மெசேஜைக் காண
!: இமெயில் மெசேஜ் ஒன்றை ஸ்பாம் மெயிலாகக் குறியிட
p: தற்போதைய மெயிலுக்கு முன் உள்ள மெயிலுக்குச் செல்ல
.: வெறும் புள்ளி அடித்தால் கூடுதலான ஆப்ஷன்ஸ் காட்டப்படும்
Esc: கர்சரை தற்போதைய பீல்டிலிருந்து நகர்த்தும்.

கம்ப்யூட்டரை ஸ்பை வேர் இல்லாமல் வைத்திருக்க


புதியதாக கம்ப்யூட்டர் ஒன்றினை உங்கள் அலுவலகப் பயன்பாட்டிற்கு வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் திட்டத்துடன் வாங்கி இருக்கிறீர்களா? அல்லது உங்கள் மகன் அல்லது மகள் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் பட்டப்படிப்பிற்கு பயன்படுத்த வாங்கி தந்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன் ஸ்பை வேர் எதுவும் வந்திடுமோ என்று பயப்படுகிறீர்களா?

ஆம், பாதுகாப்பு எதுவுமில்லாத கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் இணைந்த சில நிமிடங்களில் நிச்சயமாய் ஏதேனும் ஸ்பைவேர் புரோகிராமால் பாதிக்கப்படும் அபாயம் நிச்சயமாய் உள்ளது. அதனால் இயக்கத் தொடங்கியவுடன் என்ன செய்யலாம் என்பதனை இங்கு படிப்படியாய்க் காணலாம்.

1.விண்டோஸ் இயக்கத் தொகுப்பினை உடனே அப்டேட் செய்திடுங்கள். கண்ட்ரோல் பேனல் சென்று Windows Security Center செல்லவும்.
அங்கு automatic download என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
கம்ப்யூட் டருடன் ஏதாவது பயர்வால் புரோகிராம் அளிக்க ப்பட்டு அது இயங்கிக் கொண்டிருந்தால் விட்டு விடலாம். இல்லை என்றால் Windows XP firewall இயக்கவும்.

2. இயக்கத் தொகுப்புடன் ஆன்டி வைரஸ் தொகுப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை அப்டேட் செய்திடவும். ஆட்டோமேடிக் அப்டேட் என்பதில் டிக் அமைத்து வைக்கவும்.

3.விண்டோஸ் எக்ஸ்புளோரர் இயக்கத் தொகுப்புடன் கிடைத்திருக்கும். எனவே ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பிரவுசர்களில் ஒன்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.

4.வேறு பிரவுசர் தொகுப்பினைப் பயன் படுத்தினாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரரை லாக் செய்து வைக்கவும்.

5. குறைந்தது இரண்டு ஆண்டி ஸ்பை வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்து வைக்கவும். என்னைப் பொறுத்தவரை AdAware மற்றும் Microsoft AntiSpyware என்ற இரண்டினையும் பரிந்துரைப்பேன்.

6.ஜாவாகூல் சாப்ட்வேர் தளத்திலிருந்து Spyware Blaster and SpywareGuard என்ற இரண்டு புரோகிராம்களை அவசியம் இறக்கிப் பதிந்து வைக்கவும்.

7.IESPYAD என்னும் பாதுகாப்பு தொகுப்பினைப் பதிந்து வைக்கவும். இதனைப் பதிந்தால் வெகு மோசமான 20 ஆயிரம் தொகுப்புகளை மைக்ரோசாப்ட் நீக்கிடும். பாதுகாப்பான இன்டர்நெட் உலா வருவதற்கு மேலே காட்டியுள்ள புரோகிராம்களை இயக்கிப் பார்க்கவும்.

விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்



விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்

ALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர
ALT+2: ஸூம் 100 சதவிகிதமாக்க
ALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க
ALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரையில் காண
ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல
ALT+T: டூல்ஸ் மெனு செல்ல
ALT+P: பிளே மெனு செல்ல
ALT+F4: மீடியா பிளேயரை மூடிவிட
CTRL+1:மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர
CTRL+2: மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர
CTRL+B: இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட
CTRL+F: வரிசையில் அடுத்த பைலை இயக்க
CTRL+E: சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள
CTRL+P: இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க
CTRL+T: இயங்கியதை மீண்டும் இயக்க
CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட
CTRL+SHIFT+F: ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட
CTRL+SHIFT+S: வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/வீடியோ இயக்க
F8: மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த
F9: மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட
F10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க
Enter / Space bar: ஒரு பைலை இயக்க

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தொகுப்பின் சில பங்சன்கள்
எக்ஸெல் தொகுப்பில் அதன் அமைப் பிலேயே பலபங்சன்கள் அமைக்கப்பட்டு நமக்கு கணக் கிட எளிமைப் படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் சில பங்சன்கள் அனைவரும் எளிதாகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பங்சன் களாகும். அவற்றை இங்கு காணலாம்.

அவை : SUM, AVERAGE, MAX, MIN, மற்றும் PRODUCT பங்சன்கள் ஆகும். இவற்றின் செயல்பாடுகளையும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கும் வழிகளையும் இங்கு காணலாம்.

SUM: இந்த செயல்பாட்டின் மூலம் எண்களைக் கூட்டலாம். இதற்கான பார்முலாவினை அமைக்கும்போது அவை எண்களாகவோ அல்லது செல்களைக் குறிக்கும் குறியீடு களாகவோ இருக்கலாம். இதற்கான பார்முலா அமைப்பு SUM (numberl,number2, .,.) என இருக்க வேண்டும். இதில் numberl,number2 என்பவை நாம் அமைக்க இருக்கும் எண்கள் அல்லது செல் குறியீடுகள் ஆகும். எடுத்துக் காட்டாக SUM (3, 2) என்பது 5 என்ற விடையைக் கொடுக்கும். இதே போல செல்களில் உள்ள மதிப்புகளைக் கூட்டிக் காண அந்த செல்களின் எண்களைத் தரலாம். எடுத்துக் காட்டாக செல் A டூ முதல் A 30 வரை உள்ள மதிப்புகளைக் கூட்டிப் பெற =SUM (A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.

AVERAGE; இந்த பங்சன் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் சராசரியினைத் தருகிறது. மேலே குறிப்பிட்டது போல இவை எண்களாகவோ அல்லது செல் குறியீடு மூலம் தரப்படும் மதிப்புகளாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (numberI, number2, ...) என்பதில் அடைப்புக் குறிக்குள் தரப்படும் எண்களின் சராசரி மதிப்பினை பார்முலா மூலம் விடையாகப் பெறலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (3, 2) என்பது 2.5 என்ற விடையைத் தரும். A 1 முதல் A30 வரை உள்ள மதிப்புகளின் சராசரியைப் பெற =AVERAGE(A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.

MAX: இந்த பங்சன் கொடுக்கப்பட்ட எண்களின் அல்லது மதிப்புகளின் அதிக பட்ச மதிப்புடைய எண்ணைத் தருகிறது. எடுத்துக் காட்டாக = MAX(3. 2,45,23) என அமைக்கப் படுகையில் 45 என்ற விடை கிடைக்கும்.

இதே போல குறைந்த மதிப்பினை அறிய MIN பங்சன் பயன்படுகிறது. =M1N(3, 2,45,23) என்று பார்முலா அமைத்தால் 2 விடையாகக் கிடைக்கும்.

PRODUCT: இந்த பங்சன் மூலம் எண்களை அல்லது மதிப்புகளை பெருக்கிப் பெறலாம். =PRODUCT (13, 2) என்ற பார்முலா 26 என்ற மதிப்பினைக் கொடுக்கும். இந்த பார்முலாவிலும் எண்களுக்குப் பதிலாக செல் குறியீடுகளைத் தரலாம். A1 செல் முதல் A30 வரையிலான செல்களில் உள்ள மதிப்புகளைப் பெருக்கிப் பெற =PRODUCT (A1:A30) என்ற வகையில் பார்முலா அமைத்துப் பெறலாம்.

இன்டெல் நடந்து வந்த 40 ஆண்டுகள்



கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.

1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.

1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.

1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.

1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.

1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.

1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.

1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.

1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.

1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.

2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.

2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.

2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.

2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.

2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.

2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.

2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.

2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.

விண்டோஸ் பைல் வகைகள்



நாம் விண்டோஸ் இயக்கத் தொகுப்பினைப் பயன்படுத்துகையில் ஒரு பைலைத் திறந்து இயக்க அது என்ன வகை பைல், அதனைத் திறக்க எந்த புரோகிராமினைத் திறக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப்படாமல் பைல் பெயர் மீது அல்லது அதன் ஐகான் மீது இருமுறை கிளிக் செய்கிறோம்.

டெக்ஸ்ட் டாகுமெண்ட்கள்:
கீழே டெக்ஸ்ட் பைலுக்கான பல வகை பைல் வகைகள் தரப்படுகின்றன.

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.

.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.

.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.

.ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

.htm / .html : ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.

.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.


சுருக்கப்பட்ட பைல்கள்:
கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.

.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.


பட பைல்கள்:
விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களை உருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப் பெயர்கள் தரப்படுகின்றன.

.psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும் உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம் அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழி செய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன் பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின் அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும் புரோகிராம் www.herculesoft.com என்னும் முகவரியில் கிடைக்கிறது.

.psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொரு இமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவான பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலை அதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.

.bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும் அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம் மூலமும் இதனைத் திறக்கலாம்.

.jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடு இன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ் பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதி நவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ் புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.

.gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.

.tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில் திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் எளிமையானதாகும்.

.scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர் பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்று டிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத் தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர் பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.


ஆடியோ பைல்கள்:
இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும்.

.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.

aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.

.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.

.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.


ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்:
சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக் செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்த பைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.

.exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம் இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்து இயங்கும்.

.bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள் தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம் மற்றும் எடிட் செய்திடலாம்.

.vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம் புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களை வடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களை எழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ் புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன் உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனை ஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.

Monday, May 5, 2008

எதற்காக இன்டர்நெட் ஹிஸ்டரி?


இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 பயன்படுத்தும் புதியவரா நீங்கள்? அல்லது வெகு நாட்க ளாகவே பயன்படுத்தி வருகிறீர்களா? எப்படி இருந்தாலும் தலைப்பைப் படித்த பின்னர் இன்டர்நெட் ஹிஸ்டரி என்றால் என்ன என்று அறிய சற்று ஆர்வமாக இருப்பீர்கள் அல்லவா? இந்த குறிப்பினைப் படித்துவிடுங்கள்.
இன்டர்நெட்டில் எந்த தளங்களுக்கெல்லாம் நீங்கள் அல்லது உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒருவர் சென்று பிரவுஸ் செய்துள்ளார் என்று காட்டும் இடமே இன்டர்நெட் ஹிஸ்டரி. நீங்கள் சென்ற தளம் அல்லது குடும்பத்தில் ஒருவர் சென்ற தளம் குறித்து அறிய நீங்கள் முயற்சிக்கையில் இது உதவும். அல்லது ஏற்கனவே நீங்கள் சென்ற பயனுள்ள தளம் ஒன்றின் முகவரி உங்களுக்கு மறந்து போயிருக்கலாம்.


அதனைப் பெறவும் இந்த ஹிஸ்டரி உதவும். ஒரு நாளில் சராசரியாக எத்தனை வெப்சைட்டுகளுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள் என்று அறியவும் நீங்கள் முயற்சிக்கும் போதும் இது உதவும். உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் உங்கள் பிரவுசர் ஹிஸ்டரியினை நீங்கள் அவ்வப்போது சென்று பார்ப்பது நல்லது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 தொகுப்பில் ஹிஸ்டரி பட்டன் நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனைக் காண வழி தரப்பட்டுள்ளது. இடது மூலையில் ஒரு சிறிய ஸ்டார் ஐகானை நீங்கள் காணலாம். அதில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ஹிஸ்டரி என்று இருப்பதில் உள்ள சிறிய அம்புக்குறி மீது கிளிக் செய்தால் கீழாக ஒரு மெனு கிடைக்கும். அந்த மெனுவில் உள்ள பிரிவுகளில் பை டேட் என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள்.

உடனே உங்கள் இன்டர்நெட் ஹிஸ்டரி கிடைக்கும். வரிசையாக உங்கள் தேடுதலுக்கேற்ற வகையில் நீங்கள் சென்று பிரவுஸ் செய்த தளங்களின் பட்டியல் கிடைக்கும். இந்த தளங்களில் காட்டப்படும் வெப்சைட் முகவரிகளில் மீது கிளிக் செய்தும் நீங்கள் அந்த தளங்களுக்குச் செல்லலாம். தேதி வாரியாக, தளங்கள் வரிசையாக, இன்று பார்த்த தளங்கள், அடிக்கடி சென்று பார்த்த தளங்கள் என வகை வகையாக இவற்றைப் பார்க்கலாம். இந்த பட்டியல்களில் இருந்து தளங்களின் முகவரிகளை நீக்கவும் செய்திடலாம்.

Friday, May 2, 2008

க‌ண்‌க‌‌ள் இ‌னி லா‌க்க‌ர் கதவுகளையு‌ம் ‌திற‌க்கு‌ம்

நமது க‌ண்க‌ள் இதுவரை ‌பிற‌ரி‌ன் மன‌க் கதவுகளை‌த்தா‌ன் ‌திற‌ந்த வ‌ந்தன. ஆ‌ச்ச‌ர்ய‌ப்பட வே‌ண்டா‌ம், இ‌னி அவை வ‌ங்‌கிக‌ளி‌ன் லா‌க்க‌ர் கதவுகளையு‌ம், க‌ணி‌னி‌யி‌ல் ‌நிர‌ல்க‌ளி‌ன் கதவுகளையு‌ம் ‌திற‌க்கு‌ம்.

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ன் மெ‌ல்ப‌ர்‌ன் நக‌‌ரி‌ல் உ‌ள்ள கு‌யி‌ன்‌ஸ்லா‌ந்து ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ன் ஆ‌ய்வாள‌ர்க‌ள், க‌ண்களை அடையாளமாக‌ப் பய‌ன்படு‌த்து‌ம் பு‌திய ‌ஸ்கே‌னி‌ங் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

நமது க‌ண்க‌ளி‌ல் உ‌ள்ள ஐ‌‌ரி‌ஸ் வ‌ரிக‌ள், கை ரேகையை‌ப் போல ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌கிறது. கு‌றி‌ப்பாக ஒரே நப‌ராக இரு‌ந்தாலு‌ம் கூட, அவ‌ரி‌ன் இட‌‌து க‌‌ண்‌ணி‌ல் உ‌ள்ளது போ‌ன்ற வ‌ரிக‌ள் வலது க‌ண்‌ணி‌ல் இ‌ல்லை.

இ‌ந்த வேறுபாடு நா‌ம் இற‌க்கு‌ம் வரை மாறுவ‌தி‌ல்லை எ‌ன்பதுதா‌ன் ‌விய‌ப்ப‌ளி‌க்கு‌ம் ‌விடய‌ம். க‌‌ண்க‌‌ளி‌‌ல் படு‌ம் ஒ‌ளி‌யி‌ன் அளவை‌ப் பொறு‌த்து ஐ‌ரி‌ஸ் வேறுபா‌ட்டை து‌ல்‌லியமாக அள‌விட முடியு‌ம் எ‌ன்பது ‌சிற‌ப்பு.

இதனா‌ல், கை ரேகையை‌ப் போலவே க‌ண்களையு‌ம் அடையாளமாக‌ப் பய‌ன்படு‌த்த முடியு‌ம் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன் பு‌திய ஆ‌ய்வு அமை‌ந்து‌ள்ளது.

ஐ‌ரி‌ஸ் ‌ஸ்கே‌னி‌ங் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ல் நமது க‌ண்களை‌க் கவனமாக ஆ‌ய்வு செ‌ய்வத‌ற்கான து‌ல்‌லியமான செ‌ன்சா‌ர் கரு‌விகளு‌ம் ‌விள‌க்குகளு‌ம் உ‌ள்ளன.

இ‌ந்த ‌விள‌க்குக‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் ஒ‌ளி நமது க‌ண்‌க‌ளி‌ன் கரு‌‌வி‌ழிகளை‌த் தொ‌ட்டது‌ம், ‌பியூ‌பி‌ல் என‌ப்படு‌ம் பா‌ப்பா ‌வி‌ரி‌கிறது. அ‌ப்போது, செ‌ன்சா‌ர்க‌ள் ஐ‌ரி‌ஸ் வ‌ரிகளை‌‌‌ப் ப‌திவு செ‌ய்து கொ‌ள்‌கி‌ன்றன.

‌பி‌ன்ன‌ர் ஒ‌வ்வொரு முறை நா‌ம் வரு‌ம்போது‌ம், நமது க‌ண்க‌ளி‌ன் ஐ‌ரி‌‌ஸ் வ‌ரிகளை ஏ‌ற்கெனவே ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள வ‌ரிகளுட‌ன் ஒ‌ப்‌பிடுவத‌ன் மூல‌ம் ந‌ம்மை அடையாள‌ம் காணமுடியு‌ம்.

சு‌ற்‌றியு‌ள்ள ஒ‌ளியா‌ல் நமது ஐ‌ரி‌ஸ் வ‌ரிக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பு‌ம் கவன‌த்‌தி‌ல் கொ‌ள்ள‌ப்ப‌ட வே‌ண்டு‌ம் எ‌ன்பதை உண‌ர்‌ந்து‌ள்ள ஆ‌ய்வாள‌ர்க‌ள், அத‌ற்கான ‌சிற‌ப்பு ‌நிர‌ல்களை உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌ஸ்கே‌னி‌ங் தொ‌ழி‌ல்நு‌‌ட்ப‌ம் செயலு‌க்கு வ‌ந்தா‌ல் வ‌ங்‌கி‌க் கண‌க்குக‌ள், க‌ணி‌னி ‌நிர‌ல்க‌ள், அலுவலக‌க் கதவுக‌ள் என எ‌ல்லா வகையான ஆ‌‌ய்வு‌க்கு உ‌ட்ப‌ட்ட பகு‌திக‌ளிலு‌ம் ச‌ரியான நப‌ர்களை அடையாள‌ம் காண முடியு‌ம்.

இ‌துப‌ற்‌றி ஆ‌‌ய்வாள‌ர் பா‌ங் கூறுகை‌யி‌ல், "ஒ‌ளி அளவை‌ப் பொறு‌த்து நமது கரு‌வி‌‌ழி‌யி‌ல் உ‌ள்ள பா‌ப்பா 0.8 ‌மி.‌மீ முத‌ல் 8 ‌மி.‌மீ. வரை ‌வி‌ரிய‌க் கூடு‌ம். அ‌ப்போது ‌வினாடி‌க்கு 1,200 புகை‌ப்பட‌ங்களை எடு‌க்கு‌ம் ‌திறனுடைய கேமராவை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் ஐ‌ரி‌ஸ் வ‌ரிகளை து‌ல்‌லியமாக‌ப் படமெடு‌க்க முடியு‌ம்" எ‌ன்றா‌ர்.

Thursday, May 1, 2008

மைக்ரோசாப்ட் - பெயிண்ட் புரோகிராம்


மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்புடன் இணைந்து தரப்படும் எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம் சிறுவர்களும் பெரியவர் களும் மகிழ்ச்சியாகப் பயன்படுத்தும் புரோகிராம் ஆகும். நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம்.

புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன. எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக் கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்க Start menu >> All Programs > Accessories > Paint எனச் செல்லவும்.


பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View மெனு சென்று Tool Box, Color Box மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும்.

இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரிய வேண் டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.

அடுத்து புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா? Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்கலாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம்.

இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக் காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா? Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன் னொரு வண்ணத்தைத் தேர்ந் தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள்.

இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத் தில் எங்கு வேண்டு மானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண் டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப் படாதீர்கள். செய்து பாருங்கள்.

படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக வந்திருக்கிறது என்று அபிப்பிராயப்படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம். ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட் டோக் கள், படங்கள் என ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகி ராமைப் பயன்படுத்தி திருத்தலாம். ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி மாட்டலாம்.

மீசை வைக்கலாம். இது போல வேடிக் கையான செயல்களையும் சீரிய ஸான செயல் களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File > Open என்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீதுகிளிக் செய்து இங்கு திறக் கலாம். ஏற்கனவே உள்ள கேன் வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு மூலம் மேற் கொள்ளலாம்.

படத்தின் அமைப் பை மாற்ற Image > Stretch/Skew என்பதைப் பயன் படுத்தலாம். Image மெனு வில் Flip/Rotate பயன் படுத்தி படங்களைச் சுழட்டலாம். உங்களின் விருப்பப்படி படத் தை அமைத்துவிட்டீர்களா? சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய் திடுகை யில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பத னை முடிவு செய்து அந்த பார் மட்டைத் (.BMP, .JPEG, அல்லது .GIF) தேர்ந்தெ டுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டு மென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப் படி அச்சில் கிடைக்கும் என்பத னையும் பார்த்துக் கொள்ளலாம்.

மனதிற்கு அமைதி வேண்டுமா ?


இந்திய கர்நாடக சங்கீத ரசிகரா நீங்கள்! உங்களுக்காகவே ஓர் இணையதளம் www.sangeethapriya.org www.sangeethamshare.org/tvg/ என்ற முகவரிகளில் இயங்கி வருகின்றன. இந்த தளங்களில் நீங்கள் விரும்பும் பாடகரின் பாடல்கள் பொதிந்து கிடக்கின்றன.

உங்களிடம் யாருடைய பாடலாவது உள்ளதா? அதனை அனைவரும் ரசிக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? இந்த தளத்திலேயே அவற்றைப் பதிந்து வைக்கலாம். என்னிடம் எதுவும் இல்லையே? ஆனால் இந்த தளம் அமைப்பதில் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்கள் பங்களிப்பை பணமாக அனுப்பலாம்.

முற்றிலும் இந்திய கிளாசிகல் இசைக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட இந்த தளத்தில் வர்த்தக ரீதியாக விற்பனை செய்யப்படும் சிடியிலிருந்து பாடல்களைப் பதியக் கூடாது.

ரேடியோ கச்சேரிகள், இசைக் கலைஞர்கள் மக்களுக்காகத் தந்த இசை விழாக்கள், ரசிகர்களுக்கு அளித்த விளக்கங்கள் எனப் பலவகைகளில் இங்கு கர்நாடக சங்கீதத்தினை ரசிக்கலாம். ஸ்ரீமதி எம்.எஸ். அம்மா, செம்பை, ஜி.என்.பி., எம்பார், டி.கே.பி., கே.வி.என்.,அரியக்குடி – இப்படி யார் வேண்டும் உங்களுக்கு. இவர்களின் கச்சேரிகள் பதியப்பட்டு இங்கு எம்பி3 பைல் பார்மட்டில் மாற்றப்பட்டு டவுண்லோட் செய்திடக் கிடைக் கின்றன. சில ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த கலைஞர் களுக்கான தனிப் பிரிவுகளை இந்த தளத்தில் உருவாக்கி பராமரித்து வருகின்றனர். இவ்வாறு 800 அப்லோட்கள் உள்ளன. இவை ஒவ்வொன் றிலும் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் உள்ளன.

பாலமுரளி கிருஷ்ணா, வீணை பாலச் சந்தர், மதுரை மணி அய்யர், செம்மங்குடி, சுதா ரகுநாதன், நித்ய ஸ்ரீ மகாதேவன், காயத்ரி, மஹாராஜபுரம், வலையபட்டி, எம்.பி.என். திருவிழா, என யாரையாவது ஒரு கலைஞரின் பெயரைச் சொல்லுங்கள் அவரின் பாடல் குறைந்த பட்சம் மூன்றாவது இருக்கும். எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. வளரும் கலைஞர்களின் பாடல்களும் பல உள்ளன. ஆல் இந்தியா ரேடியோ வழங்கிய கச்சேரிகள் பல அவற்றின் குறிப்புகளுடன், இசை, தாளம் ஆகியவற்றுடன், தரப்பட்டுள்ளன.

எனக்கு திருவையாறு இசைத் திருவிழாவில் நடந்த கச்சேரி வேண்டும் என விரும்புகிறீர்களா? ஆண்டு வாரியாக கச்சேரி சீசன் தரப்பட்டுள்ளது. சென்னை திருவையாறு வேண்டுமா? அதுவும் கிடைக்கிறது. சில வீடியோ காட்சிகளும் கிடைக்கின்றன. எம்.எஸ். அம்மா பாடுவதை அப்படியே தெளிவாக கண்டு கேட்கலாம். மனதிற்கு அமைதி வேண்டுமா? செல்லுங்கள் இந்த சங்கீதக் கடலுக்கு.

ஷார்ட் கட் கீகள்

சிறப்பு குறியீடுகளுக்கான கீ தொகுப்புகள்

வாசகர்களுக்குத் தேவைப்படும் சில குறியீடுகளுக்கான கீகள் இங்கு தரப்படுகின்றன. இந்த கீகளை அமைக்கும் போது நம் லாக் கீயை அழுத்தி அந்த நம்பர் பேடில் உள்ள கீகளை அழுத்த வேண்டும். எழுத்துக்களுக்கு மேல் உள்ள நம்பர் கீகளை அழுத்தினால் இவை கிடைக்காது.

கத்தி போன்ற இந்த அடையாளம் பெற ஆல்ட் + 0134
இதனையே இரட்டையாகப் பெற ஆல்ட் + 0135
டிரேட் மார்க் அடையாளம் ஏற்படுத்த ஆல்ட் +0153
£ பவுண்ட் ஸ்டெர்லிங் அடையாளம் பெற ஆல்ட் + 0163
¥ ஜப்பானிய கரன்சியான யென் அடையாளம் பெற ஆல்ட் +0165
© காப்பி ரைட் அடையாளம் கிடைக்க ஆல்ட் + 0169
® ரெஜிஸ்டர்ட் ட்ரேட் மார்க் அடையாளம் உண்டாக்க ஆல்ட் +0174
° டிகிரி என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற ஆல்ட் +0176
± பிளஸ் ஆர் மைனஸ் என்பதனைக் காட்ட ஆல்ட் +0177
² சூப்பர்ஸ்கிரிப்ட் 2 என்பதனைக் காட்ட ஆல்ட் +178
³ சூப்பர்ஸ்கிரிப்ட் 3 என்பதனைக் காட்ட ஆல்ட் +179
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த ஆல்ட் +0183
¼ கால் என்பதைக் குறிக்க ஆல்ட் + 0188
½ அரை என்பதைக் குறிக்க ஆல்ட் + 0189
¾ முக்கால் என்பதனைக் குறிக்க ஆல்ட் + 0190

இன்னும் பல குறியீடுகளை இதேபோல ஏற்படுத்தலாம். மேலே தரப்பட்டுள்ளவை நாம் அடிக்கடி பயன்படுத்த முயற்சிக்கும் குறியீடுகளே.

ஒர்க் ஷீட் தாவலுக்கான கீகள்
எக்ஸெல் புரோகிராமில் நிறைய ஒர்க் ஷீட்களுடன் செயலாற்றிக் கொண்டிருக்கையில் அடுத்த அடுத்த ஒர்க் ஷீட்களைப் பெற விரும்பினால் மவுஸ் கர்சரைக் கீழே சென்று தேவையான ஒர்க் ஷீட் டேப் மீது கிளிக் செய்திடலாம். அல்லது கீ போர்டு கீகளையும் பயன்படுத்தலாம்.
Ctrl + Page Down கீகளை அழுத்தி னால் அடுத்த ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl + Page Up அழுத்தினால் முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.

சில கீ தொகுப்புகள்
எம் எஸ் எக்ஸெல், வேர்ட், பவர் பாயிண்ட் மற்றும் அக்செஸ் தொகுப்புகளில் *
Ctrl + F4 அழுத்தினால் பைல் மூடப்படும்*
Alt + F4 அழுத்தினால் அந்த புரோகிராம் மூடப் படும்.
F12 மட்டும் அழுத்தினால் அது Save As கட்டளையாகும்.
Shift + F12 மட்டும் அழுத்தினால் அது Save கட்டளையாகும்.
Ctrl + F12 அழுத்தினால் அது Open கட்டளை யாகும்.
Ctrl + Shift + F12 அழுத்தினால் அது Print கட்டளையாகும்.

ஆன் லைனில் அன்றாட வாழ்க்கை

உலகம் மாறிவருகிறது. மிகுந்த விலை உயர்ந்ததாக நேரம் மதிக்கப்படுகிறது. வாழ்க்கையை எளிதாக்கவும் இனிமையாக்கவும் ஆன்லைன் வர்த்தக முறை உதவுகிறது. வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளும் டிஜிட்டல் மயமாகி அன்றாட வாழ்க்கையினை இன்று கம்ப்யூட்டர் வழியாகவே நிறைவேற்றிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிட்டது. பரபரப்பு மிகுந்த இன்றைய வாழ்க்கை சூழ்நிலைக்கு இது பெரிய உதவியாகவே உள்ளது.

நகரங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இந்த டிஜிட்டல் வசதிகள் இன்று சிறிய ஊர்களிலும் பழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்டன. விமானப் பயணங்களில் தொடங்கி இன்று ட்ரெயின் டிக்கட், ஆம்னி பஸ் டிக்கட் என பயணங்களை எளிதாக்கும் வகையில் ஆன்லைனில் டிக்கட் எடுப்பது அவற்றை மாற்றி அமைப்பது, கேன்சல் செய்வது என அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.

இருந்த இடத்திலிருந்தே ஸ்டாக் மார்க்கட்டை கலக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் மேலோங்கி உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கிப் பதுக்கி விற்பனை செய்வதுவும் நடக்கிறது. ரூ.200க்கு மேல் பிரியாணி வேண்டுமா எங்கள் இன்டர்நெட் தளத்தில் ஆர்டர் செய்திடுங்கள் என்று விளம்பரம் செய்திடும் அளவிற்கு இந்த ஆன்லைன் வாழ்க்கை முன்னேறி விட்டது. இவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.. .


1. ஆன்லைன் பேங்கிங்: அனைத்து வங்கிகளும் கோர் பேங்கிங் மற்றும் அதன் அடிப்படையில் இன்டர்நெட் பேங்கிங் என்ற முறைக்கு வந்துவிட்டன. எந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியில் இலவசமாகக் கிடைக்கும் இன்டர்நெட் வசதியை விண்ணப்பம் அளித்துப் பெறலாம்.

உங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை இந்த வங்கிகள் அடுத்தடுத்த நாட்களில் உங்களுக்கு பாதுகாப்பான முறையில் பெரும்பாலும் கூரியர் மூலம் அனுப்புகின்றன. வீட்டிலோ அல்லது வெளியே இன்டர்நெட் மையங்கள் மூலமாக இந்த வங்கியின் இணையதளம் சென்று உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளலாம்.

பெரும்பாலும் நம் அக்கவுண்ட்டில் இன்றைய பேலன்ஸ் எவ்வளவு, சம்பளம் கணக்கில் சேர்ந்துவிட்டதா என்று நிறைய பேர் உறுதி செய்து கொள்கின்றனர். கிளைக்குச் சென்று அங்கு நம் வண்டியை நிறுத்த இடமில்லாமல் அலைந்து பின் உள்ளே வரிசையில் நின்று பாஸ்புக் என்ட்ரி, செக் பரிமாற்றம் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது.

அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர், டிமாண்ட் டிராப்ட் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி விண்ணப்பம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பில் செலுத்துதல் என அனைத்து பேங்கிங் பணிகளையும் இன்டர்நெட் வழியாக எந்த ஊரில் இருந்தும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இதனால் நம் நேரம், உடல் உழைப்பு, அலைச்சல் மிச்சமாகிறது. அத்துடன் பண பரிமாற்றம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் வெளிப்படை யாகவும் நடைபெறுகிறது.

2. ட்ரெயின் டிக்கட்: இந்தியாவில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு செயல்படும் இன்டர்நெட் தளமாக இந்திய ரயில்வேயின் இணையதளம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இதன் எளிமையும் பயன்படுத்து பவர்களுக்கு வசதியையும் அளிப்பதுதான். http://www.irctc.co.in/ மற்றும் http://www.srailway.com/என்ற இந்த இணைய தளங்களின் மூலம் இன்று நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயனடைகின்றனர். உங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் இந்த டிக்கட்களை எளிதாகப் பெறலாம்.

ஐ–டிக்கட் (வீடுகளுக்கே அனுப்பப்படும்) இ–டிக்கட் (நீங்களே பிரிண்ட் செய்து எடுத்துச் சென்று பயணம் மேற்கொள்வது) சீசன் டிக்கட் மற்றும் தட்கல் வழியில் டிக்கட் என அனைத்தும் கிடைக்கின்றன. எந்த வண்டியில் எந்த நாளில் இடம் உள்ளது என முதலில் உறுதி செய்து கொண்டு பின் டிக்கட் புக் செய்யலாம். குறிப்பிட்ட ட்ரெயின் என்பது மட்டுமின்றி குறிப்பிட்ட இரு ஊர்களுக்கிடையே எந்த ட்ரெயின்களெல்லாம் செல்கின்றன;
அவற்றில் என்று எத்தனை இடங்கள் உள்ளன என்று பார்த்து உறுதி செய்து டிக்கட் புக் செய்யலாம். வேண்டாத போது டிக்கட்டை கேன்சல் செய்திடலாம். கேன்சல் செய்திட அருகில் உள்ள புக்கிங் மையத்திற்குச் செல்ல வேண்டும். பணம் உங்கள் வங்கி அக்கவுண்ட்டில் சேர்க்கப்படும். ரயில்வே தளத்தில் தகவல்களை அறிய ஸ்டேஷன் கோட் எண், ட்ரெயின் எண் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். இல்லை யேல் தளத்திலேயே பெறலாம். இந்த வசதிகளை ரீடிப் தளம் தனிப்பட்ட முறையில் தருகிறது. தகவல்களை மட்டும் பெற நீங்கள் http://indianrailways.rediff.com/%20index.phpஎன்ற தளத்தினை அணுகலாம்.

இங்கு ஊர் பெயர் டைப் செய்திடத் தொடங்கினால் போதும். தளத்தில் அந்த எழுத்துக்களின் தொடங்கும் அனைத்து ஊர்களின் பெயர் கிடைக்கும். இதே போல பயண நாளையும் எளிதாக அமைக்கலாம். பின் இந்த தளம் இந்தியன் ரயில்வே தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று விளக்கமாக அளிக்கிறது. ரயில்வே தளத்தில் உடனடியாகப் பெற முடியாத தகவல்களை ஒரே முயற்சியில் இங்கு பெறலாம். ஆனால் டிக்கட் பதிவிற்கு ரயில்வே தளத்திற்குத் தான் செல்ல வேண்டும்.
இதே போல சில ஆம்னி பஸ் நிறுவனங்களும் தங்கள் இணைய தளங்கள் மூலம் பஸ்களுக்கான டிக்கட்களை வழங்குகின்றன. பஸ்களில் இடம் இருக்கிறதா என்ற தகவல்களைத் தருகின்றன. அவற்றைப் பெற்று போன், இமெயில் மூலம் டிக்கட் புக்கிங் செய்திடலாம்.

3. பாஸ்போர்ட் பெற: வெளிநாடு செல்லத் தேவையான முதல் டாகுமெண்ட் நமக்கான பாஸ் போர்ட் தான். இதற்கான அலு வலகம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஓரிரு இடங்களில் தான் உள்ளன. எனவே இங்கு சென்று விண்ணப் பிப்பது காலத்தை வீணாக்கும் செயல். இன்று ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்வதனைக் கட்டாயமாக்கி உள்ளனர். http://passport.nic.in/ என்ற தளம் இதற்கு உதவுகிறது.
இதே போல வெளிநாடு செல்ல அந்த நாட்டின் தூதர் அலுவலகங்கள் விசா வழங்கும் பணியையும் இணைய தளங்கள் வழியாக மேற்கொள் கின்றன. அல்லது இதற்கென்றே இயங்கும் ஏஜென்சிகள் தங்கள் இணைய தளங்கள் வழியாக அனைத்து நாடுகளுக்குமான விசாக்களை ஏற்பாடு செய்கின்றன.

4.திரைப்படத்திர்ற்கான டிக்கட்கள்: சென்னை போன்ற நகரங்களில் வளாகங்களை அமைத்து பல தியேட்டர்களை ஒரே இடத்தில் நடத்தி வரும் தியேட்டர் நிறுவனங்கள் இணைய தளங்கள் வழியாக டிக்கட் புக்கிங் மேற்கொள்கின்றன. நாள், ஷோ நேரம், வளாகத்தில் உள்ள தியேட்டர், படம் முதலானவற் றைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு வேண்டிய டிக்கட்களை பதிவு செய்திடலாம். வீட்டிற்கு டிக்கட்கள் டெலிவரி செய்யப் படும். இதற்கு தனி கட்டணம் உண்டு.

5. கம்ப்யூட்டர் வாங்கலாம்: டெல் நிறுவனம் உலகளாவிய அளவில் ஆன்லைனில் கம்ப்யூட்டர் விற்பனை செய்கிறது. இதன் இணைய தளம் சென்று (http://dellstoreroa02.sg.dell.com/ public /cart/configurator.jsp?prd_id=42488&sr_no=2) நமக்கு வேண்டிய வகையில் கம்ப்யூட்டர் கான் பிகரேஷன் ஏற்படுத்தி புக் செய்திடலாம்.

6.கூரியர்தபால்: வெளிநாடு களுக்கு விலை உயர்ந்த பொருட்களை, டாகுமெண்ட்களை கூரியர் ஏஜென்சி மூலம் அனுப்புகிறீர்கள். அது எங்கு உள்ளது? சென்றடைந்துவிட்டதா? என்றெல்லாம்கவலைப் படுகி றீர்களா? பெட் எக்ஸ் மற்றும் புளுடார்ட் போன்ற கூரியர் நிறுவனங்கள் உங்கள் பார்சல் அல்லது தபால் தற்போது எங்கிருக்கிறது என்பதனை தங்கள் இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியினை அளிக்கின்றன.

7. கார்ப்பரேஷன் வரி செலுத்துதல்: சொத்து வரி, தண்ணீர் வரி, பிறப்பு மற்றும் மரணச் சான்றிதழ் எனப் பல விஷயங்களை நாம் அவ்வப்போது கையாள வேண்டியதுள்ளது. பெரும்பாலான மாநகராட்சிகள் இவை குறித்த தகவல்களை அளிக்கின்றன. இணையம் வழியாக வரி வசூலிக்கும் வசதியை விரைவில் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளன.

8. மொபைல் ரீசார்ஜ் கூப்பன்: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பிரீபெய்ட் மொபைல் போன்களுக்கான ரீசார்ஜ் கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறது. உடனே உங்கள் மொபைல் போன் அக்கவுண்ட்டில் இருக்கும் டாக் டைம் வேல்யூ உயர்கிறது. உங்கள் அக்கவுண்ட் பெயர், ஐ.டி. கொடுத்து தளத்தில் நுழைந்து பின் உங்கள் மொபைல் போன் சர்வீஸ் மற்றும் எண் கொடுக்க வேண்டும். பின்னர் எவ்வளவு உயர்த்த வேண்டும் எனக் கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் மொபைல் போன் பிரீ பெய்ட் அக்கவுண்ட்டின் டாக் வேல்யூ உயர்ந்திருப்பதைக் காணலாம்.
தனித்தனி நிறுவனங்களின் இணைய தளம் மட்டுமின்றி இத்தகைய சேவைகளை வழங்க பொதுவான தளங்கள் இருக் கின்றன. இவை கட்டணம் ஏதும் பெறாமல் உங்கள் பயண டிக்கட், சினிமா டிக்கட், பொருட்கள் சப்ளை ஆகியவற்றை பெற்றுத் தருகின்றன. இதற்கான ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளன. அவை இந்த வர்த்தகத்திற்கான கமிஷனை இந்த இணைய தள நிறுவனங்களுக்குத் தருகின்றன. கூகுள் சர்ச் இஞ்சினின் தேடல் தளத்திற்குச் சென்றால் இத்தகைய தளங்களின் பட்டிய லைக் காணலாம்.
இவ்வளவு வசதிகள் இருந்தும் இன்னும் பல படித்தவர்கள் இதனைப் பயன்படுத்த முன் வருவ தில்லை. காரணம் ஆங்காங்கே நடக்கும் திருட்டுகள் தான். உண்மை தான்; பல ஏ.டி.எம். மையங்களில் நடப்பது போல இணைய தளங்கள் வழியாக வர்த்தகம் நடைபெறுகையில் நம் கிரெடிட் மற்றும் ஏ.டி. எம். கார்டு குறித்த தகவல்கள் கசிய வாய்ப்புகள் இருக்கலாம். இதனைப் பயன்படுத்தி சில திருடர்கள் நம் பணத்தை இழக்கும்வழிகளை மேற் கொள்ளலாம். ஆனால் இது எப்போதும் எல்லா இடத்திலும் நடைபெறுவதில்லை. இது போன்ற இழப்புகள் உடனே சரி செய்யப்படுகின்றன. நஷ்டம் ஈடு கட்டப்படுகின்றன. பொதுவாக நாம் பொருட்களைக் கண்ணால் பார்த்த பின்னரே வாங்க முற்படுவோம்.

அத்தகைய எண்ணமும் நம்மை இத்தகைய ஆன்லைன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடுக்கின்றன. உலகம் மாறி வருகி றது. மிகுந்த விலை உயர்ந்ததாக நேரம் மதிக் கப்படுகிறது. வாழ்க் கையை எளிதாக்கவும் இனிமை யாக்கவும் இந்த ஆன்லைன் வர்த்தக முறை உதவுகிறது. உங்கள் வங்கிக் கணக்குக்கான இன்டர்நெட் அக்கவுண்ட் தொடங் குங்கள் – இலவசமாக. வாழ்க் கையை ஆன்லைனில் அனுபவி யுங்கள். ஒருமுறை இத்தகைய வர்த்தகத்தினை மேற்கொண்டால் பின் அனைத்தும் இவ்வழியிலேயே மேற்கொள்ள முற்படுவீர்கள். மிச்சப்படுத்தும் நேரத்தையும் உழைப்பையும் உங்கள் குடும் பத்திற்காகச் செலவ ழியுங்கள். சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடருங்கள்.

Digital Art